வினாத்தாள் கசிவு: மத்திய அரசு அதிரடி!

நாடு முழுவதும் போட்டித் தேர்வுகளில் வினாத்தாள் கசிவு சம்பவங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுபோன்ற முறைகேடுகளை முழுமையாகத் தடுக்க மத்திய அரசு பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக, பொதுத் தேர்வுகளில் முறைகேடுகளைத் தடுக்க Public Examinations (Prevention of Unfair Means) Act, 2024 என்ற சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.

இந்தச் சட்டத்தின் மூலம் வினாத்தாள் கசிவு, தேர்வு மோசடி, ஆள் மாறாட்டம், அமைப்புசார்ந்த முறைகேடுகள் போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.இதனுடன், முன்னாள் இன்போசிஸ் தலைவர் நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்ட தேர்வுச் சீர்திருத்த பணிக்குழுவையும் மத்திய அரசு அமைத்துள்ளது.

இந்தக் குழு, தேசிய அளவிலான தேர்வுகளை பாதுகாப்பாகவும், வெளிப்படையாகவும், தொழில்நுட்ப உதவியுடன் நடத்துவது குறித்து பரிந்துரைகளை வழங்கி வருகிறது.செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் கண்காணிப்பு, குறியாக்கப்பட்ட வினாத்தாள் விநியோகம், தேர்வு மைய பாதுகாப்பு, தேர்வாளர்களின் அடையாளச் சரிபார்ப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப வசதிகளை விரிவாகப் பயன்படுத்தவும் பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.

நம்பகமான, வெளிப்படையான மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த கல்வி மற்றும் தேர்வு முறையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Scroll to Top