பாஜக-வில் இருந்து விலகிய அண்ணாமலை அவர்கள் தமிழ்நாடு மற்றும் இளைஞர்களை மையப்படுத்திய புதிய இயக்கம் ஒன்றை துவங்கி பின்பு அரசியல் கட்சியாக உருவெடுப்போம் என்று நேற்று அறிவித்து இருந்தார். அவர் அறிவித்த நொடியில் இருந்து துவங்கி தற்போது 20 மணி நேரத்திற்கு உள்ளாக 12 லட்சம் இணைய வழியில் தொடர்ந்து இணைந்த வண்ணம் உள்ளனர். பல்வேறு தரப்பில் இருந்தும் அண்ணாமலை அவர்களின் அரசியல் இயக்கத்திற்கு ஆதரவு பெருகி வருகிறது. 2031 தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவோம் எனவும் அண்ணாமலை அறிவித்து உள்ளார். விரைவில் நடிகர் ரஜினி அவர்களும் இணையலாம் என்ற செய்தியும் பரவி வருகிறது. நேற்று லதா ரஜினி அவர்களும் மக்கள் மேடை எனும் இயக்கத்தை அறிவித்து உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.


