திமுக தலைமையில் கூட்டணி என ஒன்று இல்லவே இல்லை: CPM சண்முகம்

புதுக்கோட்டையில் 07 மே 2026 அன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டி அளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ. சண்முகம் பல்வேறு அதிரடி கருத்துக்களை தெளிவுபடுத்தி உள்ளார். திமுக தலைமையிலான மதசார்பற்ற ஜனநாயக கூட்டணி என்ற அணி தற்போது இல்லவே இல்லை. திமுக தலைவர் மு. க ஸ்டாலின் அவர்களிடம் கேள்வி கேட்க ஊடகங்கள் பயப்படுகின்றன. திமுக தலைமை எங்கள் கட்சியை கட்டுப்படுத்தாது. திமுகவை தவிர வேறு யாரும் அந்த கூட்டணியில் தற்போது இல்லை. நாங்கள் காங்கிரஸ் தலைமையிலான இண்டி கூட்டணியில் தேசிய அளவில் தொடர்கிறோம். தவெக ஆட்சி அமைக்க பெரும்பான்மை தேவைப்பட்ட சூழலில் வெளியில் இருந்து மட்டும் ஆதரித்தோம் என்று கூறி இருந்தார். இந்த கருத்து அரசியல் தளத்தில் பல்வேறு சர்ச்சைகளை உண்டாக்கி வருகிறது.

Scroll to Top