மேற்குவங்கத்தில் அடுத்தடுத்து நடக்கும் அரசியல் சம்பவங்கள் திகைக்க வைக்கின்றன. இரும்புப் பெண்மணி, அசைக்க முடியாத தலைவர் என தோற்றமளித்த மம்தா பானர்ஜி தற்போது தன் கட்சிக்குள்ளேயே அதிகாரம் அற்றவராக்கப்பட்டுள்ளார்! கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தலைமையில் நடந்த தர்ணா போராட்டத்தில், கட்சியில் மொத்தமுள்ள 80 சட்டமன்ற உறுப்பினர்களில் 8 பேர் மட்டுமே கலந்து கொண்டதும், மொத்தமுள்ள 29 நாடாளுமன்ற உறுப்பினர்களில் வெறும் 6 பேர் மட்டுமே கலந்து கொண்டதும் பொது வெளியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒருகாலத்தில் மேற்குவங்க அரசியலின் அசைக்க முடியாத சக்தியாக கருதப்பட்ட மம்தா பானர்ஜி, 2026 தேர்தலுக்குப் பிறகு கட்சிக்குள் உருவாகியுள்ள எதிர்ப்புகளால் தனது அரசியல் வாழ்க்கையின் மிகக் கடினமான கட்டத்தை எதிர்கொண்டு வருகிறார். தற்போது எழுந்துள்ள கேள்வி ஒன்று தான்: “திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் மம்தா தலைமையின் கீழ் ஒன்றுபடுமா, அல்லது இந்த உள்கட்சி பிளவு மேற்குவங்க அரசியலில் புதிய சக்தி மையத்தை உருவாக்குமா?”
இந்த அரசியல் நெருக்கடி, மேற்குவங்கத்தின் எதிர்கால அரசியல் சமன்பாடுகளை மாற்றக்கூடிய முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது


