சமூக விரோதிகள் புகலிடமான டெல்லி போராட்டம்

டெல்லியில் ஜூலை 20 முதல் ஜூலை 25 வரை நடைபெற்ற தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றவர்களை டெல்லி காவல்துறை முக அடையாளம் காணும் தொழில்நுட்பம் மற்றும் சிசிடிவி காட்சிகள் மூலம் ஆய்வு செய்ததாக தெரிவித்துள்ளது. அந்த ஆய்வில் மொத்தம் 2,873 பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறை கூறியுள்ளது.

இதில் 989 பேருக்கு கொலை, கொலை முயற்சி, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, போக்சோ உள்ளிட்ட கடுமையான வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அவர்களில் 101 பேர் கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிலர் பல்வேறு போராட்டங்களிலும் மீண்டும் மீண்டும் பங்கேற்று வந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆனால், குற்றப் பின்னணி கொண்டவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டது மட்டும் அவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர் என்பதற்கான ஆதாரம் அல்ல என்றும், அவர்கள் உண்மையில் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டார்களா என்பது குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக டெல்லி காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. இந்த விவகாரம் அரசியல் வட்டாரங்களிலும் சமூக ஊடகங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Scroll to Top