இந்தியாவின் முதல் பறக்கும் ஆம்புலன்ஸ் சென்னையிலிருந்தே வரப்போகிறதா?

  • சென்னை ஐஐடி மெட்ராஸ் இன்குபேட் செய்த ePlane Company என்ற டீப்டெக் ஸ்டார்ட்அப், ICATT என்ற ஏர் ஆம்புலன்ஸ் நிறுவனத்துடன் 788 eVTOL ஏர் ஆம்புலன்ஸ்களை வழங்க ஒப்பந்தம் செய்துள்ளது.
  • இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 1 பில்லியன் டாலருக்கும் அதிகம்.
  • இந்த eVTOL விமானத்திற்கு ஏற்கனவே DGCA அனுமதி கிடைத்துள்ளது.
  • e200x என்ற இந்த மின்சார விமானம், 110 கிலோமீட்டர் வரை பறக்கும் திறன், மணிக்கு 200 கி.மீ. வேகம் மற்றும் 2 பயணிகள் அல்லது 200 கிலோ எடை சுமக்கும் திறன் கொண்டது.
  • 2026 இறுதிக்குள் வணிக சேவையை தொடங்கவும், ஆண்டுக்கு 100 விமானங்கள் தயாரிக்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
  • 2018 முதல் 1,500-க்கும் மேற்பட்ட நோயாளிகளை அவசர சிகிச்சைக்காக மாற்றியுள்ள ICATT, இந்தியாவின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் குறைந்தது ஒரு ஏர் ஆம்புலன்ஸை இயக்க இலக்கு வைத்துள்ளது.
  • நகரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வரும் நிலையில், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் அவசர மருத்துவ சேவைகளில் இந்த மின்சார ஏர் ஆம்புலன்ஸ்கள் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Scroll to Top