குன்னூர் விநாயகர் கோவிலில் ரூ.10 கோடி கார் பார்க்கிங் தேவையா? அமைச்சர் கேள்வி

சென்னை:குன்னூர் விநாயகர் கோவிலில் கோவில் நிதியை பயன்படுத்தி ரூ.10 கோடி மதிப்பில் கார் பார்க்கிங் அமைக்கும் திட்டம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் விவாதம் எழுந்தது.இந்த விவகாரத்தை முன்வைத்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், கோவில் நிதியின் பயன்பாடு குறித்து கேள்வி எழுப்பினார்.

குறிப்பாக, மாதத்திற்கு சுமார் 500 பக்தர்கள் மட்டுமே வருகை தரும் கோவிலில் இவ்வளவு பெரிய தொகையை செலவழித்து கார் பார்க்கிங் அமைப்பது அவசியமா என்று அவர் வினவினார்.மேலும், அந்த கோவிலில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் கூட முழுமையாக இல்லாத நிலையில், கார் பார்க்கிங் திட்டத்திற்கு ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டிருப்பது எந்த அடிப்படையில் என்பதை முந்தைய அரசு விளக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

கோவில் நிதி என்பது பக்தர்களின் காணிக்கையால் உருவாகும் பொதுநிதி என்பதால், அதனை கோவில் பராமரிப்பு, பக்தர்களுக்கான வசதிகள் மேம்பாடு மற்றும் ஆன்மிகத் தளங்களின் பாதுகாப்பு போன்ற முக்கிய தேவைகளுக்கே முன்னுரிமை அளித்து பயன்படுத்த வேண்டும் என்றும் ரமேஷ் வலியுறுத்தினார்.

குன்னூர் விநாயகர் கோவிலில் கார் பார்க்கிங் அமைக்கும் திட்டம் குறித்து தற்போது அரசியல் வட்டாரங்களில் விவாதம் எழுந்துள்ள நிலையில், இந்த திட்டத்திற்கான அரசின் விளக்கத்தை பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

Scroll to Top