முகத்தில் குண்டு பாய்ந்தும் தீவிரவாதியை வீழ்த்திய தமிழக வீரருக்கு கீர்த்தி சக்ரா

தெற்கு காஷ்மீரின் குல்காம் பகுதியில் கடந்த 2024 டிசம்பர் 19 அன்று நடைபெற்ற தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் அபார வீரத்தை வெளிப்படுத்திய இந்திய ராணுவ வீரர் லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரம் ஏ.வுக்கு நாட்டின் இரண்டாவது உயரிய அமைதிக்கால வீர விருதான கீர்த்தி சக்ரா வழங்கப்பட்டது.

பீரங்கிப் படைப்பிரிவைச் சேர்ந்த அவர், 34 ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் பிரிவில் பணியாற்றி வந்தார். நடவடிக்கையின்போது முகம் மற்றும் வலது தோள்பட்டையில் துப்பாக்கிக் குண்டு காயம் ஏற்பட்ட போதிலும், அவர் பின்வாங்காமல் தொடர்ந்து போரிட்டார்.நெருங்கிய மோதலில் ஒரு தீவிரவாதியை சுட்டுக்கொன்று நடவடிக்கையின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

அவரது அசாதாரண துணிச்சலையும் தன்னலமற்ற சேவையையும் பாராட்டி கீர்த்தி சக்ரா விருது வழங்கப்பட்டது.இந்த விருதை குடியரசுத் தலைவர் , கடந்த ஜூன் 8 அன்று ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற விழாவில் வழங்கினார்.

Scroll to Top