இந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர்களில் அதிக நாட்கள் தொடர்ந்து பதவி வகித்தவராக பிரதமர் நரேந்திர மோடி புதிய சாதனை படைத்துள்ளார்.கடந்த 2014 மே 26 அன்று முதல் முறையாக இந்தியாவின் பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி, தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் பிரதமராக பணியாற்றி வருகிறார். 2026 ஜூன் 10 நிலவரப்படி, அவரது தொடர்ச்சியான பதவிக்காலம் 4,399 நாட்களை எட்டியுள்ளது.இதன்மூலம், இந்தியாவின் முதல் பிரதமரான பண்டித ஜவஹர்லால் நேருவின் சாதனையை மோடி முறியடித்துள்ளார். சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலுக்குப் பிறகு, 1952 மே 13 அன்று தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக பதவியேற்ற நேரு, 1964 மே 27 அன்று மரணமடையும் வரை பதவியில் இருந்தார். அவரது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் பதவிக்காலம் மொத்தம் 4,398 நாட்களாக இருந்தது.தற்போது 4,399 நாட்களை நிறைவு செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக அதிக நாட்கள் தொடர்ந்து பதவி வகித்த இந்திய தலைவராக வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.இந்த சாதனை, இந்திய அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. தொடர்ந்து மூன்று மக்களவைத் தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்திருக்கும் மோடி, நாட்டின் நீண்டகால அரசியல் தலைமைகளில் ஒருவராகவும் திகழ்கிறார்.இதன் மூலம், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக அதிக நாட்கள் பதவி வகித்தவர் என்ற பெருமையை இதுவரை பெற்றிருந்த ஜவஹர்லால் நேருவின் சாதனையை நரேந்திர மோடி கடந்துள்ளார்.


