INDI கூட்டணி உருவான பிறகு, பல்வேறு மாநிலத் தேர்தல் தோல்விகள் மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கிடையேயான கருத்து வேறுபாடுகள் காரணமாக அதன் ஒற்றுமை தொடர்ந்து கேள்விக்குறியாகி வந்த நிலையில், இந்தக் கூட்டம் முக்கியத்துவம் பெற்றிருந்தது. ஆனால் கூட்டம் நடைபெறும் முன்பே பல கட்சிகள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் மற்றும் தி.மு.க. இடையே ஏற்பட்ட கடுமையான அரசியல் மோதலே இந்த முடிவுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தங்களை “துரோகம் செய்துவிட்டது” என்று குற்றம்சாட்டிய தி.மு.க., காங்கிரஸ் பங்கேற்கும் கூட்டத்தில் தாங்கள் கலந்து கொள்ளமாட்டோம் என அறிவித்துள்ளது.
மம்தா மட்டும் ஆதரித்து உள்ளார். ஒருபுறம் தி.மு.க. வெளியேறுவதாக அறிவித்திருப்பது, மறுபுறம் AAP பங்கேற்காதது, மேலும் காங்கிரஸ் – CPI(M) இடையேயான மோதல்கள் ஆகியவை INDIA கூட்டணியின் எதிர்காலம் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளன.


