பாஜக ஆதரவு அரசியல் விமர்சகராகவும், “Maridhas Answers” யூடியூப் சேனல் மூலம் பிரபலமானவராகவும் அறியப்படும் Maridhas Malaichamy, சென்னை சைபர் கிரைம் போலீசாரால் மதுரையில் வைத்து கைது செய்யப்பட்டு விசாரணைக்காக சென்னை அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த கைது சம்பவத்திற்கு பல்வேறு சமூக ஆர்வலர்கள், வலதுசாரி அமைப்புகள் மற்றும் பாஜக ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். “கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கக் கூடாது”, “அரசியல் கருத்துக்களுக்காக கைது செய்வது ஜனநாயகத்திற்கு நல்ல முன்னுதாரணம் அல்ல” என்ற கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
குறிப்பாக தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரும் மேனாள் ஆளுநருமான தமிழிசை அவர்கள் இந்த கைது நடவடிக்கையை கண்டித்து முதல்வர் விஜய்க்கு சகிப்புத்தன்மை இல்லை என கருத்து தெரிவித்து உள்ளார். மேலும் பலரும் இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று கண்டித்து வருகின்றனர்.


