CJP போராட்டம்: ஸ்ரீதர் வேம்பு எச்சரிக்கை

நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் அரசியல் நடவடிக்கைகள் இந்தியாவின் வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று Zoho நிறுவனரும் தொழில்முனைவோருமான ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் CJP அமைப்பு அறிவித்துள்ள போராட்டத்தை குறிப்பிட்டு சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்த அவர், இந்தியாவின் வேகமான பொருளாதார வளர்ச்சியை தடுக்கவும், நாட்டின் முன்னேற்றத்தை சீர்குலைக்கவும் முயலும் சக்திகளின் நோக்கத்தை மக்கள் உறுதியாக நிராகரிக்க வேண்டும் என்று கூறினார்.இந்தியா இன்று உலகின் வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக உள்ளது.

இந்த நிலையில், அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும், அவை ஜனநாயக வழிமுறைகளின் மூலமே தீர்க்கப்பட வேண்டும்; மக்கள் மத்தியில் பதற்றத்தையும் குழப்பத்தையும் உருவாக்கும் செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், இந்திய ஜனநாயகத்தில் தேர்தலே மக்களின் தீர்ப்பை வெளிப்படுத்தும் மிக முக்கியமான நடைமுறை என்றும், எந்த கருத்து வேறுபாடாக இருந்தாலும் அதற்கு தீர்வு தேர்தல் மற்றும் அரசியலமைப்பு வழிகளில்தான் தேடப்பட வேண்டும் என்றும் ஸ்ரீதர் வேம்பு குறிப்பிட்டார்

“நாட்டின் வளர்ச்சியும், பொருளாதார முன்னேற்றமும், மக்களின் நலனுமே அனைவரின் முதல் முன்னுரிமையாக இருக்க வேண்டும்” என்று அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Scroll to Top