ராகுல் காந்தி அரசியல் நாடகம்? – ஜே.பி. நட்டா தாக்கு

தமிழகத்தில் B.Ed. தேர்வர்களுக்கு ஆதரவாக ராகுல் காந்தி போராட்டம் நடத்துவது அரசியல் லாபத்திற்காகவே என மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் தற்போது B.Ed. தேர்வர்களுக்காக குரல் கொடுக்கும் ராகுல் காந்தி, இதேபோன்ற பிரச்சினைகள் பிற மாநிலங்களில் நடந்தபோது ஏன் மௌனம் காத்தார் என்று கேள்வி எழுப்பினார்.

குறிப்பாக, கேரளாவில் 26 PSC தேர்வு விண்ணப்பதாரர்கள் சந்தித்த பாதிப்புகள், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் PUC மற்றும் வாரியத் தேர்வு விண்ணப்பதாரர்கள் எதிர்கொண்ட சிக்கல்கள் ஆகியவற்றின்போது ராகுல் காந்தி போராடவில்லை என அவர் விமர்சித்தார்.

மேலும், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி ஆளும் மாநிலங்களில் ஏராளமான தேர்வர்கள் பாதிக்கப்பட்டபோதும் அதுகுறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்காத ராகுல் காந்தி, தமிழகத்தில் மட்டும் போராட்டம் நடத்துவது இரட்டை நிலைப்பாடு என ஜே.பி. நட்டா குற்றம்சாட்டினார்.”மாணவர்களின் நலனுக்காக அல்ல; அவர்களின் போராட்டத்தை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துவதே காங்கிரஸின் நோக்கம்” என்றும் ஜே.பி. நட்டா தெரிவித்தார்.

Scroll to Top