“இரட்டை நிலைப்பாடா காங்கிரஸ்?”

டெல்லியில் மாணவர்கள் மற்றும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) நடத்திய போராட்டத்தின் போது போலீசார் தடியடி, கண்ணீர்ப்புகை உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டதை கண்டித்து, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியுடன் சேர்ந்து, கேரள முதல்வர் வி.டி. சதீஷனும் பிரதமர் இல்லம் நோக்கி நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றார்.

அவர், மாணவர்கள் மீது நடந்த போலீஸ் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தார். இதேநேரத்தில், சமூக வலைதளங்களில் எதிர்க்கட்சிகள் மற்றும் பலரும் ஒரு கேள்வியை எழுப்புகின்றனர்.

கேரளாவில் மாணவர் போராட்டங்கள் நடைபெற்றபோது, போலீசார் தண்ணீர் பீய்ச்சி வாகனங்கள் மற்றும் பலவந்தக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை பயன்படுத்திய சம்பவங்கள் நடந்தன.

அப்போது அவை சட்டம்-ஒழுங்கு நடவடிக்கை என கூறிய காங்கிரஸ், டெல்லியில் நடந்த அதேபோன்ற போலீஸ் நடவடிக்கையை மட்டும் ஜனநாயக விரோதம் என்று கூறுவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த விவகாரத்தில் விமர்சகர்கள், “தங்கள் மாநிலத்தில் போலீஸ் நடவடிக்கை நியாயம்; எதிர்க்கட்சியாக இருக்கும் இடத்தில் அதே நடவடிக்கை தவறு” என்ற அணுகுமுறை அரசியல் இரட்டை நிலைப்பாட்டை காட்டுகிறது என குற்றம்சாட்டுகின்றனர்.

இருப்பினும், காங்கிரஸ் தரப்பின் வாதம் வேறுபட்டது. டெல்லியில் அமைதியான மாணவர் போராட்டத்தின் மீது தேவையற்ற வன்முறை பயன்படுத்தப்பட்டதாகவும், அதற்கே எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

“டெல்லி போராட்டத்தில் போலீஸ் நடவடிக்கையை கடுமையாக கண்டித்த காங்கிரஸ் தலைமையின் நிலைப்பாடு… கேரளாவில் நடந்த மாணவர் போராட்டங்களின் போது எடுக்கப்பட்ட போலீஸ் நடவடிக்கைகளுடன் ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் இரட்டை நிலைப்பாடு குறித்த விவாதம் தீவிரமடைந்துள்ளது. இதுகுறித்து அரசியல் விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன.”

Scroll to Top