ஜம்மு & காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரின் நெளஷேரா பகுதியில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற விக்ஷர்நாக் (Vicharnag) கோவில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.1989-ஆம் ஆண்டு, ஜம்மு & காஷ்மீரில் தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்ததைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களால் இந்த கோவில் மூடப்பட்டது.
சுமார் 36 ஆண்டுகளாக வழிபாடு இன்றி இருந்த இந்த கோவில், சீரமைப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து மீண்டும் பக்தர்களுக்காக திறக்கப்பட்டது.இந்த நிகழ்வில், ஜம்மு & காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கலந்து கொண்டு கோவிலை திறந்து வைத்து, சிறப்பு பூஜையில் பங்கேற்றார்.
கோவில் திறப்பு விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கோவில் திறக்கப்பட்டிருப்பது, காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி வருவதற்கான முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
“1989-ஆம் ஆண்டு தீவிரவாத அச்சுறுத்தலால் மூடப்பட்ட விக்ஷர்நாக் கோவில்… 36 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டிருப்பது, ஜம்மு & காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை மீண்டும் மலர்வதற்கான முக்கிய அடையாளமாகக் கருதப்படுகிறது.”


