2026–27 நிதியாண்டில் Modified Programme for Development of Semiconductor and Display Manufacturing Ecosystem திட்டத்திற்கு ₹8,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் செமிகண்டக்டர் (Chip) மற்றும் Display உற்பத்தியை வேகப்படுத்துவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
Chip Fabrication (Fab), Chip Packaging (ATMP/OSAT), மற்றும் Chip Design போன்ற துறைகளில் உள்நாட்டு திறன்களை விரிவுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்த முதலீட்டின் மூலம் உயர்தர தொழில்நுட்ப வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும், இந்திய இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
உலகளாவிய சிப் விநியோகச் சங்கிலியில் இந்தியாவின் பங்கை அதிகரித்து, இறக்குமதி சார்பை குறைத்து, “Make in India” இலக்கை வலுப்படுத்தவும் இந்த திட்டம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே நாட்டில் பல செமிகண்டக்டர் திட்டங்கள் ஒப்புதல் பெற்று கட்டுமானம் மற்றும் உற்பத்தி நிலைக்கு நகர்ந்து வரும் நிலையில், இந்த புதிய நிதி ஒதுக்கீடு இந்தியாவை உலகளாவிய சிப் உற்பத்தி மையமாக மாற்றும் முயற்சிக்கு மேலும் வலுசேர்க்கும்.


