இந்தியா – இந்தோனேஷியா உறவில் புதிய மைல்கல்லாக, பிரதமர் நரேந்திர மோடியின் ஜகார்த்தா பயணத்தின் போது பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
அதில் முக்கியமாக, இந்தியாவில் தயாரிக்கப்படும் அதிவேக பிரம்மோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணைகள் மற்றும் அஸ்திரா வான்-வான் ஏவுகணைகள் இந்தோனேஷியாவுக்கு வழங்கும் பாதுகாப்பு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. இதன் மூலம், பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாமுக்கு அடுத்ததாக, பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்கும் நாடுகளின் பட்டியலில் இந்தோனேஷியாவும் இணைந்துள்ளது.
இரு நாடுகளும் பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு, முக்கிய தாதுப் பொருட்கள், தொலைத்தொடர்பு, கல்வி, சுகாதாரம், விண்வெளி ஆய்வு மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல துறைகளில் 14-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.
இந்த சந்திப்பில், இந்தியா – இந்தோனேஷியா உறவை வலுப்படுத்திய பங்களிப்பை பாராட்டி, பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்தோனேஷியாவின் மிக உயரிய குடிமக்கள் விருதான ‘பின்டாங் அடிபுர்ணா’ விருதை அதிபர் பிரபோவோ சுபியாண்டோ வழங்கினார்.
இந்த பயணம், இந்தியாவின் ‘Act East’ கொள்கைக்கும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இரு நாடுகளின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார கூட்டாண்மைக்கும் புதிய வலுசேர்த்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் மதிப்பிடுகின்றனர்.


