அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தி.மு.க ஆட்சியில் கடந்த ஆண்டு நடைபெற்ற உதவி பேராசிரியர் தேர்வு முடிவு முறைகேடு புகார் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்.
புறநிலை வினாத்தாளில் 100 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற ஒருவர் விளக்கமுறை வினாத்தாளில் எப்படி பூஜ்ய மதிப்பெண் பெற முடியும்?
மதிப்பெண்கள் சீரற்ற முறையில் வழங்கப்பட்டுள்ளன; படித்த இளைஞர்களின் எதிர்காலத்துடன் TRB விளையாடுகிறது.
இளைஞர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பேராசிரியர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களை நிர்ணயிக்க வேண்டும்.” என்று கூறி இருக்கிறார்.


