மாணிக்கம் தாகூருக்கு வினோஜ் சரமாரி கேள்வி!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் அவர்களே,

மேற்குத் தொடர்ச்சி மலையின் பெருமழை நீரை தமிழகத்திற்கு திருப்பிவிடுவதற்காக ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கேரளப் பகுதியில் கட்டப்பட்டதே செண்பகவல்லி தடுப்பணை.

ஆனால், 1955 மற்றும் 1967-ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் அணை உடைந்ததிலிருந்து, தமிழகத்திற்கு வர வேண்டிய நீர் கேரளாவுக்கே வீணாகச் சென்று கொண்டிருக்கிறது.இதன் காரணமாக, கன்யா மதகு கால்வாய் வழியாக வைப்பாற்றில் கலக்க வேண்டிய நீர்வரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது.

இதன் விளைவாக, விருதுநகர் மாவட்டத்தின் ராஜபாளையம், வெம்பக்கோட்டை, சாத்தூர் மற்றும் தென்காசி மாவட்டத்தின் சிவகிரி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு இலட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதியை இழந்துள்ளன. மேலும், சுமார் 40 லட்சம் மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமும் பல பத்தாண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் உள்ளது. தமிழகத்திலும் காங்கிரஸ் ஆளும் கூட்டணியில் முக்கிய அங்கமாக உள்ளது. இரு மாநிலங்களிலும் உங்களுக்குச் சாதகமான அரசியல் சூழல் இருந்தும், செண்பகவல்லி அணையைச் சீரமைத்து, தமிழகத்தின் இழந்த நீர் உரிமையை மீட்டெடுக்க இதுவரை நீங்கள் எடுத்துள்ள உறுதியான நடவடிக்கைகள் என்ன?

தமிழக மக்களுக்கு பதில் சொல்லுங்கள் என்று, பாஜகவைச் சேர்ந்த வினோஜ் பி. செல்வம் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

Scroll to Top