ஸ்ரீதர் வேம்பு, முதல்வர் விஜய் பற்றி கூறிய கருத்தால் விவாதம்!

தமிழகத்தின் கிராமப்புறக் கல்வி குறித்து முக்கியமான கருத்தை பகிர்ந்துள்ளார் Zoho நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு.

தனது சமூக வலைதள பதிவில், “கிராமப்புற குழந்தைகளுக்கு முற்றிலும் இலவசமாக கல்வி வழங்கும் எங்கள் கலைவாணி கல்வி மையம் பள்ளிக்கு, முந்தைய ஆட்சிக் காலத்தில் அரசு அனுமதி பெறுவதில் கடுமையான தாமதம் ஏற்பட்டது. இது இலவசப் பள்ளியாக இருந்தபோதிலும், அனுமதி பெற கணிசமான தொகை பணம் கேட்கப்பட்டதாகவும், அதுவே ஒரே வழி என்று தெரிவிக்கப்பட்டதாகவும்” அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “தற்போது முதல்வர் விஜய் பதவியேற்ற பிறகு, பள்ளிக்கான தேவையான அனுமதிகள் எந்தத் தடையும் இல்லாமல் விரைவாகவும், தானாகவே கிடைத்துள்ளன. இந்த மாற்றம் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இந்த நேர்மறையான மாற்றத்தை மனதார பாராட்டுகிறேன்.

இந்த புத்துணர்ச்சியான நிர்வாக மாற்றத்திற்காக மாண்புமிகு முதல்வர் திரு. விஜய் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும் ஸ்ரீதர் வேம்பு பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு, கல்வி, நிர்வாக வெளிப்படைத்தன்மை மற்றும் அரசு அனுமதி நடைமுறைகள் குறித்து புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

Scroll to Top