அமைச்சர் கீர்த்தனா குறித்து அவதூறு கருத்துகள் மற்றும் ஏஐ மூலம் மாற்றியமைக்கப்பட்ட படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் நேற்று மதுரையில் கைது செய்யப்பட்ட யூடியூபர் மாரிதாஸ், இன்று நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ரூ.10,000 பிணைத் தொகையுடன் விடுவிக்கப்பட்டுள்ள அவருக்கு, ஒரு வாரம் தினமும் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மாரிதாஸ் கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கக்கூடாது என்றும், விமர்சனக் கருத்துகளுக்காக கைது செய்வது ஜனநாயகத்திற்கு ஏற்றதல்ல என்றும் அவர்கள் கருத்து வெளியிட்டிருந்த நிலையில், இன்று அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


