₹1.78 லட்சம் கோடி சாதனை… இந்தியா ஆயுத உற்பத்தியில் புதிய உச்சம், எப்படி?


இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி… 5 ஆண்டுகளில் இரட்டிப்பானது எப்படி?

  • 2025–26 நிதியாண்டில், இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி ₹1.78 லட்சம் கோடியாக உயர்ந்து, இதுவரை இல்லாத புதிய சாதனையைப் படைத்துள்ளது.
  • இது கடந்த ஆண்டைவிட 15.6% அதிகம். மேலும், 2020–21-ஐ ஒப்பிடும்போது 110% உயர்வு பதிவாகியுள்ளது.
  • ‘ஆத்மநிர்பர் பாரத்’ திட்டத்தின் கீழ் உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தி, தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு மற்றும் நவீன ஆயுத உற்பத்தி இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகிறது.
  • பாதுகாப்பு உற்பத்தியில் அரசுத் துறை நிறுவனங்கள் 76%, தனியார் துறை 24% பங்களித்துள்ளன. தனியார் துறையின் பங்கு இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
  • அதேபோல், பாதுகாப்பு ஏற்றுமதியும் ₹38,424 கோடியாக புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
  • ராஜ்நாத் சிங், இந்த வளர்ச்சி இந்தியாவின் தற்சார்பு பாதுகாப்புத் திறனையும் உலகளாவிய பாதுகாப்பு உற்பத்தி மையமாக உருவாகும் இலக்கையும் வலுப்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளார்.
Scroll to Top