தோண்ட தோண்ட வெளியே வரும் திமுகவினரின் ஊழல்!

சென்னை மாநகராட்சி வேலை வாங்கித் தருவதாக ரூ.69 லட்சம் மோசடி புகார் – திமுக மாவட்ட செயலாளர் நே. சிற்றரசு மீது சொந்தக் கட்சியினரே குற்றச்சாட்டு!

சென்னை மாநகராட்சியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக, திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் நே. சிற்றரசு மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புகாரை திமுகவைச் சேர்ந்த துளசிராமன் என்பவர் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.புகாரின்படி, மாநகராட்சியில் நிரந்தர வேலை வாங்கித் தருவதாக நம்பிக்கை அளித்து பலரிடம் தலா ரூ.7 லட்சம் வரை வசூலிக்கப்பட்டதாகவும், மொத்தமாக ரூ.69 லட்சத்திற்கும் அதிகமான தொகை பெறப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

வேலை கிடைக்காததோடு, பணமும் திருப்பித் தரப்படவில்லை என்பதால் காவல் ஆணையரிடம் நடவடிக்கை கோரி மனு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.நே. சிற்றரசு தற்போது திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட செயலாளராக உள்ளார்.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அண்ணா நகர் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு அரசியல் ரீதியாக கவனம் பெற்றவர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆதரவாளர்களில் ஒருவராகவும், கட்சியின் அடித்தளத்தில் இருந்து வளர்ந்த நிர்வாகியாகவும் அறியப்படுகிறார். தேர்தல் பிரமாணப் பத்திரத்தின்படி, அவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.190.06 கோடி என பதிவாகியுள்ளது.

இதற்கிடையில், இந்தப் புகார் தொடர்பாக சிற்றரசு தனது விளக்கத்தையும் அளித்துள்ளார். ‘கட்டபொம்மனின் கடைசி வாரிசு’ எனக் கூறி மோசடி செய்ததாக குற்றச்சாட்டுக்கு உள்ளான துளசிராமன்தான் உண்மையில் மோசடியில் ஈடுபட்டவர் என்றும், அவர் மீது ஏற்கெனவே புகார் அளிக்கப்பட்டதால்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.இந்த விவகாரத்தில் தற்போது வெளியாகியுள்ளது புகார் மற்றும் பதில் விளக்கம் மட்டுமே.

குற்றச்சாட்டுகள் தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. விசாரணையின் முடிவில்தான் உண்மை நிலை மற்றும் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து தெளிவான தகவல் வெளியாகும்.

Scroll to Top