தமிழகத்தில் இன்று முதல் மத்திய அரசின் 125 நாள் வேலை உறுதித் திட்டம்!

மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள ‘விக்சித் பாரத் – ஜி ராம் ஜி (Viksit Bharat – Guarantee for Rozgar and Ajeevika Mission – Gramin)’ 125 நாள் வேலை உறுதித் திட்டம் இன்று (ஜூலை 1) முதல் அமலுக்கு வந்துள்ளது. இதுவரை செயல்பாட்டில் இருந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் (100 நாள் வேலைத் திட்டம்) விரிவாக்கப்பட்ட வடிவமாக இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்தத் திட்டத்திற்காக நாடு முழுவதும் ரூ.95,692 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

தமிழ்நாட்டுக்காக ரூ.7,957.57 கோடி மத்திய பங்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் திட்டத்தை செயல்படுத்த மாநில அரசும் தனது பங்காக சுமார் 40% நிதியை வழங்க வேண்டும். அதன்படி தமிழகத்தின் பங்களிப்பு சுமார் ரூ.5,305.04 கோடி ஆக இருக்கும். இரண்டையும் சேர்த்து மொத்த திட்ட மதிப்பு ரூ.13,262.61 கோடி வரை இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்- ஆண்டுக்கு 100 நாட்களுக்கு பதிலாக 125 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்கும் இலக்கு.- கிராமப்புற ஏழை மற்றும் வேலைவாய்ப்பு தேவைப்படும் குடும்பங்களுக்கு முன்னுரிமை.- ஊரக சாலை, நீர்நிலைகள், மழைநீர் சேமிப்பு, மரநடுகை, பொதுச் சொத்து உருவாக்கம் உள்ளிட்ட பணிகள் தொடரும்.- மத்திய – மாநில அரசுகள் இணைந்து நிதி வழங்கும் முறை.- ஊதியம் நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.தமிழகத்திற்கு கிடைக்கும் பயன்கணக்கீடுகளின்படி, தமிழ்நாட்டில் இந்தத் திட்டத்தின் மூலம் 27.68 கோடி மனித வேலைநாட்களை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது.

மாநிலத்தில் தற்போது வேலை உறுதித் திட்டத்தில் பதிவு செய்துள்ள 69.76 லட்சம் குடும்பங்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடையக்கூடும். ஒருவருக்கு ஒரு நாள் வேலை வழங்குவதற்கான சராசரி செலவு ரூ.479.49 என மதிப்பிடப்பட்டுள்ளது.அரசியல் விவாதம்இந்தத் திட்டம் குறித்து அரசியல் ரீதியாகவும் விவாதங்கள் எழுந்துள்ளன.

மாநில அரசுகள் 40% நிதியை ஏற்க வேண்டியிருப்பதால் கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என்றும், திட்ட செயல்பாட்டில் மத்திய அரசின் அதிகாரம் அதிகரிக்கும் என்றும் சில கட்சிகள் விமர்சனம் முன்வைத்துள்ளன. அதே நேரத்தில், கிராமப்புற மக்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதால் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

திட்டத்தின் முக்கியத்துவம்100 நாள் வேலை உறுதித் திட்டம் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்திற்கு முக்கிய ஆதாரமாக இருந்த நிலையில், அதை 125 நாட்களாக உயர்த்துவது வேலைவாய்ப்பை அதிகரிக்கும் முயற்சியாகக் கருதப்படுகிறது. குறிப்பாக விவசாயம் இல்லாத காலங்களில் கிராமப்புற குடும்பங்களுக்கு கூடுதல் வருமான வாய்ப்பை உருவாக்கும் நோக்கத்துடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

Scroll to Top