தவெக அமைச்சர் சரத் தொடர்பான சர்ச்சையில், அவரது விளக்கத்தில் பல முரண்பாடுகள் இருப்பதாக பாஜக இளைஞரணி மாநிலத் தலைவர் வினோஜ் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்ட பதிவில், உடல்நலக்குறைவாக இருந்த குழந்தைக்கு மருத்துவர் டானிக்கிற்கு பதிலாக மாத்திரை பரிந்துரைத்தாரா என்றும், உடல்நிலை சரியில்லாத குழந்தையை அழைத்துக்கொண்டு ஐபிஎல் போட்டியை பார்க்க சென்றது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், மாத்திரையை தண்ணீரில் கரைத்து கொடுக்காமல், செல்போன் மீது கொட்டி, ரூபாய் நோட்டால் மூடி, ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி சேர்த்து குழந்தைக்கு கொடுத்தது சரியான முறையா என்றும் விமர்சித்துள்ளார்.
அத்துடன், குழந்தைக்கு மருந்து கொடுத்த வீடியோவை “Thug Life Moment” என்ற தலைப்பில் வெளியிட்டது யார் என்றும் வினோஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.இந்த பதிவு சமூக வலைதளங்களில் பரவலாக கவனம் பெற்று வருகிறது.


