மகளிர் சக்தியை கௌரவிக்கும் மத்திய அரசு!

மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக பெண்கள், விவசாயிகள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்தை இலக்காகக் கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, 32 கோடிக்கும் அதிகமான பெண்கள் ஜன்தன் வங்கிக் கணக்குகள் மூலம் நேரடி நிதி சேவைகளைப் பெற்று வருகின்றனர். மேலும், 3 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் “லட்சாதிபதி சகோதரிகள்” திட்டத்தின் மூலம் தொழில் மற்றும் சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்கி பொருளாதார ரீதியாக முன்னேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் ரூ.16 லட்சம் கோடிக்கும் அதிகமான நிதி உதவி நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் சிறு மற்றும் குறைந்த நிலப்பரப்புடைய விவசாயிகளுக்கு பெரும் ஆதரவாக இருந்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மகளிர் முன்னேற்றம், விவசாய வளர்ச்சி மற்றும் மக்களின் நலன் ஆகிய மூன்று முக்கிய துறைகளில் மத்திய அரசு கடந்த 12 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளதாக விளம்பரத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பெண்களின் பொருளாதார சுயநிறைவு, விவசாயிகளின் வருமான உயர்வு மற்றும் சமூக நலன் ஆகியவற்றை மையமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நம்பிக்கை, வளர்ச்சி, மக்கள் நலன்” என்ற கருப்பொருளுடன் கடந்த 12 ஆண்டுகளாக மத்திய அரசு மேற்கொண்ட பணிகள் நாட்டின் பல்வேறு தரப்பினருக்கும் பயனளித்து வருவதாக மத்திய அரசின் தகவல் வெளியீட்டகம் குறிப்பிடப்பட்டுள்ளது.

Scroll to Top