திருச்சி மாவட்டம் துறையூரில், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த பட்டியலின (SC) சமூகத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியரின் உடலை பொதுக் கல்லறையில் அடக்கம் செய்ய எதிர்ப்பு கிளம்பியது.ஒரே கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவராக இருந்தபோதும், சாதி அடிப்படையில் அடக்கம் செய்ய மறுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டதுடன், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் பல்வேறு கட்டங்களில் பேச்சுவார்த்தை நடத்தினர்.ஆனால், பேச்சுவார்த்தைகள் உடனடியாக பலன் அளிக்காததால், உடல் சுமார் 3 நாட்கள் அடக்கம் செய்ய முடியாமல் வைக்கப்பட்டிருந்தது.
பின்னர், மாவட்ட நிர்வாகம் எதிர்தரப்பினருடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை சமாதானப்படுத்தியது.இதையடுத்து, 3 நாட்கள் தாமதத்திற்குப் பிறகு, ஓய்வுபெற்ற ஆசிரியரின் உடல் பொதுக் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.
கிறிஸ்தவ கல்லறையிலும் சாதி பாகுபாடு என்ற குற்றச்சாட்டால் 3 நாட்கள் அடக்கம் செய்ய முடியாமல் இருந்த உடல்… நீதிமன்ற உத்தரவு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் தலையீட்டுக்குப் பிறகு இறுதியாக அடக்கம் செய்யப்பட்ட சம்பவம் திருச்சி துறையூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


