பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு முன்னெடுத்து வரும் சென்னை–பெங்களூரு புல்லட் ரயில் திட்டம் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. இதற்கான முன்கட்ட கட்டுமான பணிகளுக்கான டெண்டரை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
சுமார் 306 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த அதிவேக ரயில் பாதையின் மதிப்பீட்டு செலவு ₹18,000 கோடி என கூறப்படுகிறது. இறுதி பாதை ஆய்வு முடிந்த பிறகே திட்டத்தின் துல்லிய செலவு உறுதி செய்யப்படும்.
இந்த புல்லட் ரயில் மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இதனால் தற்போது 6–7 மணி நேரம் ஆகும் சென்னை–பெங்களூரு பயணம் ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக சுருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திட்டத்தில் சென்னை சென்ட்ரல், பூந்தமல்லி, பரந்தூர் உள்ளிட்ட நிலையங்கள் இடம்பெறுகின்றன.
மேலும் சித்தூர், கோலார் வழியாக பெங்களூருவை இணைக்கும் வகையில் பாதை வடிவமைக்கப்பட்டுள்ளது. • இந்த வழித்தடத்தில் 3 சுரங்கப்பாதைகள் அமைக்கப்படுகின்றன.
இதில் சென்னை சென்ட்ரலில் 1.7 கி.மீ. சுரங்கப்பாதையும், கர்நாடகா மற்றும் ஆந்திரப் பகுதிகளில் நீளமான சுரங்கங்களும் இடம்பெறுகின்றன. மொத்தம் சுமார் 28 கி.மீ. பாதை நிலத்தடியில் செல்லும்.
திட்டத்திற்காக 41 கிராமங்களில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த அதிவேக ரயில் சேவை 2035-க்குள் செயல்பாட்டுக்கு வரும் இலக்குடன் திட்டமிடப்பட்டுள்ளது.
தென்னிந்தியாவின் முக்கிய இரண்டு மாநகரங்களை அதிவேகமாக இணைக்கும் இந்த திட்டம், தொழில், தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் முதலீட்டு வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று மத்திய அரசு எதிர்பார்க்கிறது.


