மன்மோகன் சிங் சொன்ன அதிர்ச்சி வார்த்தை என்ன?

முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி, தனது India and I: A Hundred Memories, Not a Memoir புத்தகத்தில் இந்த சம்பவத்தை பதிவு செய்துள்ளார்.

இந்த சம்பவம் 2012 உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் காலத்தில் நடந்ததாக அவர் கூறியுள்ளார்.அப்போதைய மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித், முஸ்லிம்களுக்கு 9% இடஒதுக்கீடு வழங்குவதாக தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்தார்.

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாகக் கூறி, தேர்தல் ஆணையம் சல்மான் குர்ஷித்துக்கு கண்டனம் தெரிவித்தது.இதையடுத்து, காங்கிரஸ் அமைச்சர்கள் சிலர் தேர்தல் ஆணையத்தை விமர்சித்ததாக குரேஷி குறிப்பிட்டுள்ளார்.

இதனால் வருத்தமடைந்த குரேஷி, தனது அதிருப்தியை பிரதமர் அலுவலகத்துக்கு தெரிவித்தார்.பின்னர் பிரதமர் மன்மோகன் சிங், குரேஷியை நேரில் சந்தித்து, “நீங்கள் அப்படித்தான் நினைத்தால், நான் தற்கொலை செய்துகொள்வேன்” என்று மனவேதனையுடன் கூறியதாக புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், “தேர்தல் ஆணையம் இந்திய ஜனநாயகத்தின் ஆன்மா; அதை பலவீனப்படுத்தக் கூடாது” என்றும் அவர் கூறியதாக குரேஷி எழுதியுள்ளார்.அதன்பிறகு தேர்தல் ஆணையத்திற்கு எதிரான அமைச்சர்களின் விமர்சனங்கள் நிறுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவை அனைத்தும் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷியின் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள அவரது நினைவுக் குறிப்புகளின் அடிப்படையிலான தகவல்கள்.

Scroll to Top