இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டம் 1857 அல்ல… 1806!

ஜூலை 10, 1806… வேலூர் கோட்டையில் வெடித்தது இந்திய வரலாற்றின் முதல் பெரிய ராணுவ கிளர்ச்சி.

ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக இந்திய சிப்பாய்கள் ஆயுதம் ஏந்தினர்.

புதிய ராணுவ உடை விதிமுறைகள் மற்றும் மத நம்பிக்கைகளில் தலையீடு கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.

அதிகாலை தொடங்கிய தாக்குதலில் பல ஆங்கிலேய அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.

பின்னர் ஆங்கிலேய படை கிளர்ச்சியை கடுமையாக ஒடுக்கியது.

நூற்றுக்கணக்கான இந்திய சிப்பாய்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர் அல்லது தண்டிக்கப்பட்டனர்.

1857 சிப்பாய் புரட்சிக்கு முன்னோடியாக இந்த வேலூர் புரட்சி வரலாற்றில் முக்கிய இடம் பெற்றது.இந்திய விடுதலைப் போராட்டத்தின் முதல் வீர முழக்கமாகவே இது இன்று நினைவுகூரப்படுகிறது.

Scroll to Top