கருவறையில் முதல்வரின் படம் வைத்து பூஜை செய்வதா?

சென்னை:இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகம் முழுவதும் கடந்த 22-ம் தேதி முதலவர் விஜய் பிறந்த நாள் விழா அக்கட்சியின் சார்பாக கொண்டாடப்பட்டது. அந்தப் பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தில், பல கோயில்களின் கருவறைகளுக்குள் விஜய் படத்தை வைத்து வழிபட்டுள்ளனர்.

இது அங்கு வருகை தந்த பக்தர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.குறிப்பாக பழனி முருகன் கோயில், தவெக கட்சியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விநாயகர் கோயிலிலும், அம்மன் கோயிலிலும் கருவறையில் விஜய் படத்தை வைத்து வழிபட்டுள்ளனர்

அதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பலப்பட்டரை மாரியம்மன் கோயிலில் பூசாரியை மிரட்டி, கருவறைக்குள் அமர்ந்து விஜய் படத்தை வைத்து வழிபட்டு இருக்கின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தவெக மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் விநாயகர் கோயிலிலும், அம்மன் கோயிலிலும் கருவறையில் விஜய் படத்தை வைத்து வழிபட்டு உள்ளனர்.தவெகவினரின் செயல் தமிழக பக்தர்களிடையே அதிர்ச்சியையும் மிகுந்த மன வருத்தத்தையும் கவலையையும் ஏற்படுத்தி உள்ளது.

எனவே, கோயில் கருவறைக்குள் தனது படத்தை வைத்து பூஜை செய்வதை தவிர்க்குமாறு தங்கள் கட்சியினருக்கு முதலவர் விஜய் அறிவுறுத்த வேண்டும்.” என்று கூறியுள்ளார்.

Scroll to Top