நீட் பேப்பர் லீக் பிரச்சினையை தொடர்ந்து அண்ணாமலை அவர்கள் NEET மறுதேர்வுக்கு (21 ஜூன் 2026) எடுக்கப்படும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை (CRPF+CISF எஸ்கார்ட், 4-லேயர் CCTV, பயோமெட்ரிக், பல அடுக்கு சோதனை, PMO மேற்பார்வை) விமர்சித்தார். இவை மாணவர்களுக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும், தேர்வு நேரத்தை 180லிருந்து 195 நிமிடமாக அதிகரிப்பது NEP தேசிய கல்விக் கொள்கை 2020-ன் “தேர்வு அழுத்தம் குறைப்பு” இலக்குக்கு எதிரானது என்று X தளத்தில் கூறி இருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜகவின் வினோஜ் பி செல்வம் தனது X தளத்தில், ” பயோமெட்ரிக் சரிபார்ப்பு, சிசிடிவி கண்காணிப்பு, பாதுகாப்பு சோதனைகள் மற்றும் மேற்பார்வை ஆகியவை எந்தவொரு பெரிய அளவிலான, முக்கியத்துவம் வாய்ந்த தேர்விலும் பின்பற்றப்படும் வழக்கமான நடைமுறைகளாகும்.சீனாவின் காவ்காவ் (Gaokao) தேர்வை ஆண்டுதோறும் 1.3 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் எழுதுகின்றனர். உலகிலேயே மிகவும் கடுமையான தேர்வு நடைமுறைகளின் கீழ் அந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. அதை யாரும் “இராணுவமயமாக்கல்” என்று கூறுவதில்லை; மாறாக, “தகுதியை பாதுகாப்பது” என்று கருதுகின்றனர்.
உலக வல்லரசுகளுடன் போட்டியிட்டு இந்தியா ஒரு வலிமையான முன்னேறிய நாடாக உருவாக வேண்டுமெனில், நம்பகத்தன்மையும் நேர்மையான போட்டியும் அவசியம். மாணவர்கள் தேர்வு முறையின் மீது நம்பிக்கை கொள்ளும் சூழல் உருவாக வேண்டும்; தரநிலைகள் கடைப்பிடிக்கப்படும் ஒவ்வொரு முறையும் அரசியல் அச்சத்தை ஏற்படுத்தும் பிரச்சாரங்கள் தேவையில்லை.மாணவர்களுக்கு தேவை நியாயமான, வெளிப்படையான மற்றும் நம்பகமான தேர்வு முறைதான்; அரசியல் பயமுறுத்தல் அல்ல.” என்று கூறி உள்ளார்.
அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.


