பிரான்சில் முழங்கிய வந்தே மாதரம்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் நாட்டின் நீஸ் (Nice) நகரில் அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரானை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். ஜி-7 (G7) மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் சென்றுள்ள மோடி, அதிபர் மேக்ரானுடன் இணைந்து ‘பாரத் இன்னோவேட்ஸ்’ (Bharat Innovates) என்ற தொழில்முனைவோர் மாநாட்டையும் கூட்டாகத் தொடங்கி வைத்தார்.

பிரான்​ஸ், ஸ்லோவேக்​கியா நாடு​களில் பிரதமர் மோடி 6 நாட்​கள் சுற்​றுப் பயணம் மேற்​கொள்​கிறார். இதற்​காக டெல்​லி​யில் இருந்து கடந்த 13-ம் தேதி அவர் பிரான்ஸ் புறப்​பட்​டுச் சென்​றார். இந்​நிலை​யில், பிரான்​ஸின் நீஸ் நகரில் ‘பாரதத்​தின் புதுமை கண்​டு​பிடிப்​பு​கள்’ என்ற 3 நாள் மாநாடு நேற்று தொடங்​கியது.

இந்​தி​யா​வைச் சேர்ந்த 150-க்​கும் மேற்​பட்ட தகவல் தொழில்​நுட்ப நிறு​வனங்​கள், ஸ்டார்ட்​அப் நிறு​வனங்​கள் மாநாட்​டில் அரங்​கு​களை அமைத்​துள்​ளன. உலகம் முழு​வதும் இருந்து 500-க்​கும் மேற்​பட்ட முதலீட்​டாளர்​கள் சிறப்பு விருந்​தினர்​களாக பங்​கேற்​றுள்​ளனர்.

பிரதமர் வரவேற்பு நிகழ்வில், லுச்னிகா என்சம்பிள் (Lucnica Ensemble) குழுவினர் “வந்தே மாதரம்” பாடலைப் பாடி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வு, “வந்தே மாதரம்” பாடலின் 150வது ஆண்டு நினைவை நாம் கொண்டாடி வரும் இந்த முக்கியமான காலகட்டத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் வரலாற்றிலும், விடுதலைப் போராட்டத்திலும் இப்பாடல் ஆற்றிய மகத்தான பங்களிப்பை நினைவுகூரும் தருணமாகவும் இது அமைந்துள்ளது.

Scroll to Top