அசாம் விமான விபத்தில் 5 வீரர்கள் உயிரிழப்பு!

அஸ்ஸாமில் மாநிலம் ஜோர்ஹட் விமானப்படைத்தளத்தில் இன்று விமானப்படை விமானம் AN-32 தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானது. விபத்தில் விமானத்தில் இருந்த விமானப்படை வீரர்கள் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விமானம் இரண்டாக உடைந்து தீப்பிடித்தது.

சம்பவ இடத்தில் இருந்து கரும்புகை வெளியானது. விபத்தில் பைலட் இறந்துவிட்ட நிலையில் இணை பைலட் காயத்துடன் உயிர் தப்பினார். தீயணைப்புத்துறையினர் விரைந்து செயல்பட்டு மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இது குறித்து அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா சர்மா அளித்த பேட்டியில், ”ஜோர்ஹட் விமான நிலையத்தில் ஒரு விமானப்படை சரக்கு விமானம் தொழில்நுட்ப பிரச்னைகளால் விபத்தில் சிக்கியது.

இது குறித்து விசாரித்து வரும் துணை ஆணையரின் கூடுதல் விவரங்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்,” என்று தெரிவித்தார். விபத்து குறித்து கோர்ட் விசாரணைக்கு விமானப்படை உத்தரவிட்டுள்ளது

Scroll to Top