மத்திய அரசுடன் தமிழக அரசு இணைந்து செயல்படும்: விஜய் அறிவிப்பு

வரும் ஜூலை 1 முதல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGS) மாற்றப்பட்டு, புதிய VB-GRAM (Viksit Bharat – Guarantee for Rozgar and Ajeevika Mission Gramin) திட்டம் அமலுக்கு வர உள்ளது. இந்த மாற்றம் தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய திட்டத்தின் கீழ், வேலைவாய்ப்பு உத்தரவாத நாட்கள் 100-லிருந்து 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளன. இதனால் கிராமப்புற தொழிலாளர்கள் கூடுதல் வேலை வாய்ப்பைப் பெறுவார்கள். ஆனால், திட்ட நிதி ஒதுக்கீட்டில் செய்யப்பட்டுள்ள மாற்றம் மாநில அரசுக்கு சவாலாக பார்க்கப்படுகிறது.

MGNREGS திட்டத்தில் ஊதியச் செலவை மத்திய அரசே முழுமையாக ஏற்றுக்கொண்ட நிலையில், VB-GRAM திட்டத்தில் 60:40 நிதிப் பகிர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 60% செலவை மத்திய அரசும், 40% செலவை மாநில அரசும் ஏற்க வேண்டும். இதனால் தமிழக அரசுக்கு ஆண்டுதோறும் ₹5,000 கோடிக்கும் மேல் கூடுதல் நிதிச் சுமை ஏற்படலாம் என மதிப்பிடப்படுகிறது.

முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் சூழலில் இந்த புதிய நிதிச் சுமையை எவ்வாறு சமாளிக்கும் என்பது கேள்வியாக எழுந்துள்ளது. மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி பழைய நிதி முறையை கோருமா அல்லது புதிய முறையை ஏற்று திட்டத்தை செயல்படுத்துமா என்பது கவனிக்கப்படுகிறது.

மத்திய பாஜக அரசுடன் இணக்கமாக தோழமையுடன் செயல்பட்டு தமிழ்நாட்டிற்கு தேவையான நலஉதவிகளை செயல்படுத்த விஜயின் தவெக அரசு திட்டமிட்டு உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு உள்ளது.

Scroll to Top