“பாம்புக்கு என்னதான் பால் வார்த்தாலும் அது நஞ்சைதான் கக்கும். திமுக என்பது ஒரு நச்சு பாம்பு. நமக்கு 4 எம்.பி.க்கள் டெல்லியில் இருந்தபோது அவர்களை தன்னுடன் சேர்த்துக்கொண்டு மந்திரி பதவி வாங்கியவர்தான் ஸ்டாலினின் தந்தை. அப்படிப்பட்ட தில்லுமுல்லுகளுக்கு சொந்தக்காரர்கள்தான் அவர்கள். திமுகவுடன் ஒட்டும் வேண்டாம் உறவும் வேண்டாம் என்பது உங்களுடைய கருத்து; அதுதான் எல்லாருடையும் கருத்தும் கூட!” – என்று மதிமுகவின் அவைத்தலைவர் அர்ஜுன்ராஜ் பேசிய கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பி உள்ளது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் திமுக கூட்டணியை விட்டு விலக வேண்டும் என்று அர்ஜுன்ராஜ் கோரிக்கை வைத்துள்ளார். திமுகவிற்கு மாற்றாக, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) போன்ற கட்சிகளுடன் இணைந்து புதிய கூட்டணி அமைக்க வேண்டும் என்பதே தங்களின் விருப்பம் என்றும் அவர் பேசியுள்ளார்.


