தி.மு.க கூட்டணியில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) விலகுவதாக மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் அறிவித்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற கட்சியின் ஆலோசனைக் கூட்டங்களின் முடிவில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தி.மு.க கூட்டணியில் தொடர்ந்து செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் கூட்டணியில் இருந்து விலகும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஏற்கனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தி.மு.க கூட்டணியில் இருந்து விலகிய நிலையில், தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கூட்டணியை விட்டு வெளியேறியுள்ளது. இதன் மூலம் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தி.மு.க கூட்டணியில் இருந்து விலகியுள்ளன.
மேலும், தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வழங்கி வரும் நிலையில், இந்த அரசியல் முடிவு முக்கியத்துவம் பெற்றுள்ளது.


