இன்று திமுகவுக்கு இருக்கும் குழப்பம் என்ன தெரியுமா?

விஜய்க்கு எதிராக எப்படி அரசியல் செய்வது என்பதுதான்.

ஆட்சியை இழந்தது மட்டுமல்ல, எதிர்கட்சி அரசியலைக் கூடச் செய்ய முடியாமல் போய்விட்டது திமுகவுக்கு.

விஜய் இதுவரை எதற்கும் குரல் கொடுத்து மாட்டிக் கொள்ளவில்லை. வாய் திறந்து ஏதாவது சொன்னால்தானே வம்பு?

விஜய் ஆட்சியில் தவறுகள் நடக்கின்றன. ஆனால் அவையெல்லாம் திமுக ஆட்சியின் எச்சம் தான் என்று மக்கள் கருதுகிறார்கள். எனவே முதல்வர் விஜய் தப்பித்துக் கொள்கிறார்.

கடந்த திமுக ஆட்சியில் நடந்தது போல் மக்கள் வெறுக்கும் அளவுக்கோ, கோபம் கொள்ளும் அளவுக்கோ இன்னும் இந்த ஆட்சியில் எதுவும் நடக்க ஆரம்பிக்கவில்லை. பயிர்க் கடன் தள்ளுபடி விஷயத்தில் விவசாயிகள் போராட்டத்தைத் தவிர வேறு எதுவும் பெரிதாக இல்லை.

கட்சிக்காரர்கள் தொடர்ந்து தவறு செய்கிறார்கள். அத்துமீறுகிறார்கள்
அமைச்சர்களில் பலர் உளறிக் கொட்டுகிறார்கள். ஆனால் இவை எதுவுமே விஜய்யின் இமேஜை பாதிக்கவில்லை.‌

அதே சமயம், லஞ்ச ஒழிப்புக்கும், பெண்கள் பாதுகாப்புக்கும் நிர்வாகம் எடுத்து வரும் நடவடிக்கை வெளிப்படையாகத் தெரிகிறது. நிர்வாகத்தில் சிறிய மாற்றம் தெரிகிறது.

தவெகவினர் அரசியலுக்கும் நிர்வாகத்திற்கும் புதியவர்கள். Settle ஆவதற்கு கொஞ்ச நேரம் கொடுக்க வேண்டாமா என்று மக்களே கூறுகிறார்கள்.

திமுகவினரால் தூண்டப்பட்டாலும் கூட, மக்கள் விஜய் அரசுக்கு எதிராகத் தற்சமயம் எழ மாட்டார்கள்.

தங்கள் திட்டங்களின் மீது தவெக அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது என்றும் திமுகவுக்கு இந்த அரசை எதிர்த்துப் போராட்டம் நடத்த எந்த வாய்ப்பும் இல்லை.

தவெக ஆட்சியின் மீது மக்களுக்கு ஏமாற்றம் உருவாகும் வரை திமுக பொறுத்திருக்க வேண்டும். ஆனால் அதுவரை பொறுத்திருக்க அவர்களுக்குப் பொறுமை இல்லை. அதிரடி அரசியல் செய்தே பழகிவிட்ட திமுகவுக்கு இது பெருத்த ஏமாற்றம்.

அதிக இளைஞர்களுக்கு வாய்ப்புகள் அளிக்க வேண்டும் என்று முன்பே உதயநிதி கூறியது சரிதானோ என்று இப்போது தோன்றுகிறது. இதனால் எல்லாம் உதயநிதியை தீர்க்கதரிசி என்று கூற முடியாது.‌ அவர் கூற்றுப்படியே திமுக தலைமை அதிகமான இளைஞர்களை களம் இறக்கி இருந்தாலும் விஜய்யை வெற்றி கண்டு இருக்க முடியுமா என்பது சந்தேகமே.

தேவையில்லாமல் மத்திய பாஜகவையும் அதிமுகவையும் எதிர்த்து தேர்தல் பிரச்சார நாட்களை வீணடித்து விட்டது திமுக தலைமை.‌ Wasted energy. அவர்களெல்லாம் வீழ்த்த முடியாத எதிரிகள் அல்ல. விஜய் தான் உண்மையான எதிரியாக இருந்தார். இதைத்தான் திமுக தலைமை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.

இதைத்தான் “இல்லாத எதிரியுடன் சண்டை போட்டுவிட்டோம்” என்று உதயநிதி கூறினார். Late realisation.

விஜய் கட்சிக்கு 108 என்றவுடன் அவர் ஆட்சியமைப்பதைத் தடுக்க, எதிரிக் கட்சியான அதிமுகவுடன் கைகோர்க்கும் சூழ்ச்சியையும் கட்சிக்குள் யாரும் ரசிக்கவில்லை. உதயநிதியே அதை முறியடித்ததாகக் கேள்விப்படுகிறோம்.

எல்லாம் முடிந்த பிறகு, Gen-Z DMK கூட்டம். வந்த சிறுசுகள் ஒருவருக்காவது பொது அறிவோ அரசியல் ஞானமோ இருக்க வேண்டுமே?

I am a proud Kothus!
I am a proud உ. பி!

என்று திமுகவுக்கு கொத்தடிமையாக இருப்பதையும் உடன்பிறப்பாக இருப்பதையுமே பெருமையாகப் பேசியதைத் தவிர வேறு என்ன செய்தார்கள்?

கடைசியில் ஊடகங்களுக்கு troll stuff ஆனதுதான் மிச்சம். இவர்களால் இன்னும் கொஞ்ச காலம் வெளியே தலை காட்ட முடியாது.

தேர்தல் தோல்வியில் இருந்து திமுக இன்னும் மீளவில்லை. கொளத்தூர் தொகுதியில் ஒப்பாரி ஓயவில்லை.

கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு உண்டு என்று தேர்தலுக்கு முன்பே கூறியிருந்தால் ஒருவேளை களம் திமுகவுக்குச் சாதகமாக மாறியிருக்கலாம். ஆனால் கருணாநிதியே அதை செய்யாத போது நாம் ஏன் செய்ய வேண்டும் என்று திமிர் காட்டியது கட்சித் தலைமை.

தேர்தல் முடிந்த கையோடு, கொள்கைகளைக் காற்றில் பறக்க விட்டு விஜய் கட்சியுடன் ஒட்டிக் கொண்டன திமுகவின் கூட்டணி கட்சிகள்.
கூட்டணியில் மதிமுக இருப்பதும் இல்லாததும் ஒன்றுதான்.

இன்று திமுக விஜய்க்கு எதிராக அரசியல் செய்ய ஏதாவது காரணத்தைத் தேடுகிறது. அது கிடைக்கவில்லை. விஜய்யை பிராண்ட் செய்ய முடியவில்லை. கேலி செய்ய முடியவில்லை. மட்டம் தட்ட முடியவில்லை.

விஜய் மீது விமர்சனம் வைத்தால் அது விஜய்க்கே சாதகமாக முடியும் என்று திமுக பயப்படுகிறது.

So…. DMK is in a state of flux today.

விஜய்யை எதிர்த்து அரசியல் செய்யும் காலம் வரும்போது, அண்ணாமலையும் ஒரு மிகப்பெரிய சக்தியாக உருவாகி இருப்பார். அந்த சக்தியை எதிர்த்து திமுக அரசியல் செய்ய முடியாது. மங்கிப் போகும்.

கடைசியில் திமுகதான் எல்லா விதத்திலும் loser.

Scroll to Top