முதல்வர் எப்போது பத்திரிகையாளர்களைச் சந்திப்பார் என்று கேட்கப்பட்ட போது, அமைச்சர் அருண் ராஜ் கூறியது என்ன தெரியுமா? முதல்வர் எப்போது பத்திரிகையாளர் பேட்டி நடத்த வேண்டும் என்று நினைக்கிறாரோ அப்போது அது நடக்கும்!
ஆஹா! என்ன அறிவார்ந்த பதில்!
நரேந்திர மோடியும் தான் பத்திரிகையாளர்களைச் சந்திப்பதே இல்லை. பிறகு… விஜய் பற்றிக் கேட்பது நியாயமா என்கிறார்கள்.
நரேந்திர மோடி பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி தான் தன் கருத்துக்களைக் கூற வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவருடைய எண்ண ஓட்டம் என்ன என்பது அனைவருக்கும் தெரியும். அதை மாதம் ஒரு முறை மன் கி பாத் மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் மக்களுக்குத் தெரிவிக்கிறார்.
பெட்ரோல் டீசல் எரிவாயு விஷயத்தில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று ஏற்கனவே கூறிவிட்டார். சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும் என்று அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
ஒவ்வொரு ஆறு மாதமும் ஏதாவது ஒரு மாநிலத்தில் தேர்தல் வரத்தான் செய்கிறது. அப்போது தேர்தல் பரப்புரை செய்யும்போது தன் கருத்துக்களை பொதுவெளியில் வைக்கிறார் பிரதமர்.
பொருளாதார வளர்ச்சி
வேலைவாய்ப்பு
மக்கள் தொகை பெருக்கம்
நாணய மதிப்பு
விலைவாசி கட்டுப்பாடு
தனிமனித ஒழுக்கம்
மதநல்லிணக்கம்
திறமையான நிர்வாகம்
ஜாதி பாகுபாடற்ற சமூக அமைப்பு
பாகிஸ்தானின் ஊடுருவல்
சீனாவின் அத்துமீறல்
வங்கதேசத்தின் சித்து விளையாட்டு
இஸ்ரேல் ஈரான் போரில் பாரதம் யார் பக்கம்?

எதிர்பாராத விதமாக, தமிழக வெற்றிக் கழகம் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்து, நடிகர் ஜோசஃப் விஜய் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, ஆட்சி பற்றித் தமிழக மக்களிடம் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.
பல எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. பல ஏமாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
போன்ற அனைத்து விஷயங்களிலும் நரேந்திர மோடி என்ன நினைக்கிறார் என்பதைப் பள்ளி மாணவர்களே சொல்ல முடியும். இதற்கெல்லாம் தனியாகப் பத்திரிகையாளர் பேட்டி நடத்தி தான் மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற அவசியம் நரேந்திர மோடிக்கு இல்லை.
விஜய்யுடைய மௌனம் பலருக்குப் பேரிரைச்சலாக வந்து காதை அடைக்கிறது.
கூடிய விரைவில் விஜய் திருவாய் மலர்ந்தருள மாட்டாரா என்று ஏங்கித் தவிக்கிறார்கள் மக்கள்.
உண்மையிலேயே இது மதசார்பற்ற அரசு தானா? அல்லது கிறிஸ்தவர்களுக்காக, கிறிஸ்தவர்களால் நடத்தப்படும் அரசா? இந்த அரசைப் பின்னாலிருந்து இயக்குபவர்கள் மதவெறி பிடித்த கிறிஸ்தவ இயக்கங்கள் என்று சொல்லப்படுவது உண்மையா?
இந்த அரசுக்கும் deep Stateக்கும் ஆழமான தொடர்பு இருப்பதாகக் கூறும் குற்றச்சாட்டுகள் உண்மையா?
பெரம்பூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்து விட்டீர்களே, அதற்கு மாற்று ஏற்பாடு என்ன? தமிழகத் தொழில் வளர்ச்சிக்கு உங்களிடம் உள்ள வேறு உபாயம் தான் என்ன?
மத்திய அரசுடன் இணக்கமாகப் போவீர்களா அல்லது தினமும் குடுமி பிடி சண்டைதான் போடுவீர்களா?
தமிழர் நலனில் முழு கவனம் செலுத்துவீர்களா அல்லது தமிழ்த்தாய் வாழ்த்தை எப்போது பாட வேண்டும், வள்ளுவனுக்கு எந்த நிறத்தில் ஆடை அணிவிக்க வேண்டும் என்பது போன்ற சத்தில்லாத விஷயங்களில் காலத்தைக் கழிக்க போகிறீர்களா?
லஞ்ச ஊழலுக்கும் மற்றும் நிர்வாகச் சீர்கேட்டுக்கும் புகழ்பெற்ற பல ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகளை மிக முக்கியப் பொறுப்புகளில் நியமித்திருக்கிறீர்களே… இவர்களுடைய background checking செய்தீர்களா இல்லையா? யாருடைய அழுத்தத்தில் இவர்களுக்கு உயரிய பதவிகள் கொடுக்கப்பட்டது?
அதிகாரிகள் நியமனத்தில் பெரும்பாலானோர் ஏன் கிறிஸ்தவர்களாகவே இருக்கிறார்கள்?
பிரதமரை சந்திக்க டெல்லி சென்றபோது ஏன் துறை சார்ந்த அதிகாரிகளையோ அமைச்சர்களையோ அழைத்துச் செல்லவில்லை?
சனாதனத்தை ஒழிப்பேன் என்று உதயநிதி சட்டசபையில் கூறி அமர்ந்த போது அதற்கு மறுப்பு தெரிவிக்காமல், கண்டிக்கவும் செய்யாமல், அதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தீர்களே…
அவரைத் தொடர்ந்து உங்கள் மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபாவும் அதையே கூறினாரே…. உங்கள் கட்சி எம்எல்ஏவாக இருந்தும் கூட முஸ்தபாவை நீங்கள் கண்டிக்க கூட முன் வரவில்லையே…..?
அப்படியானால் நீங்களும் உதயநிதி கோஷ்டியில் சேர்ந்து விட்டீர்களா? உங்களுக்கும் அதே எண்ணம் இருக்குமானால் உங்கள் ஆட்சி எப்படி சமூக நீதி ஆட்சி ஆகும்?
குற்றப் பின்னணி உள்ளவரை நிதி அமைச்சராக நியமித்து மக்களுக்கும் மத்திய அரசுக்கும் நாட்டுக்கும் என்ன செய்தி சொல்கிறீர்கள்?
தமிழக அமைச்சர்கள் தினந்தோறும் உளறிக் கொட்டுவதைப் புறந்தள்ளி விடலாம். எம்எல்ஏக்கள் அடாவடியாக ஆய்வு நடத்துவதையும் புறந்தள்ளி விடலாம். தொழில்துறை அமைச்சர் வீடியோ போடுவதையும் புறந்தள்ளி விடலாம்.
ஆனால்….
இந்தக் கேள்விகளுக்கு பதில் வேண்டும். இவற்றுக்கு ஒரு ஆனந்தோ ஆதவ் அர்ஜுனாவோ செங்கோட்டையனோ ராஜ்மோகனோ அருண் ராஜோ பதிலளிக்க முடியாது.
முதல்வர் தான் விடை கொடுக்க முடியும். எனவேதான் முதல்வர் விஜய் விரைவில் மௌனம் கலைக்க வேண்டும். தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும்.
மௌனம் கலைப்பாரா, முதல்வர் விஜய்?
(வாசுதேவன்)