திருப்பரங்குன்றம் வழக்கில் இந்துகளின் முதுகில் குத்திய திமுக அரசு.
இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்ரமணியம் அவர்களின் பத்திரிகை அறிக்கை.
திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை விதிக்கக் கோரியும் மற்றும் மேற்படி மலையை சமண மலையாக அறிவிக்கக் கோரியும் இருவேறு வழக்குகள் தாக்கலாகி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணை நடந்து வருகிறது.
இந்த வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் எடுத்துரைத்த வாதங்களில் திருப்பரங்குன்றம் மலை முருகன் கோவிலுக்கே சொந்தம் என்றும் அங்கே ஆடு, கோழி பலியிடுவது மலையின் புனிதத்தை கெடுக்கும் செயல் என்றும் கூறப்ட்டுள்ளது.
ஆனால் திமுக அரசின் காவல்துறை சார்பில் மலையில் ஆடு, கோழி பலியிடுவது காலங்காலமான வழக்கம் என்றும் நெல்லிதோப்பு பகுதியில் தொழுகை நடத்த தடை இல்லை என்றும் அப்பட்டமான பொய்யை நீதிமன்றத்தில் எடுத்துரைத்து இந்துக்களின், முருகபக்தர்களின் முதுகில் குத்தியுள்ளது திமுக அரசின் காவல்துறை.
மேலும் மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக அரசு சார்பில் எடுத்துரைத்த வாதங்களில் திருப்பரங்குன்றம் மலை நீண்ட காலமாக சிக்கந்தர் மலை என்றே அழைக்கபடுகிறது என்றும், அந்த மலையில் ஆடு, கோழி பலியிடுவது நீண்டகாலமாக நடந்து வருவதாகவும் ஆடு, கோழி பலியிட்டால் தீட்டு என்பது மனித சமூகத்துக்கு எதிரானது என்றும், 18 படி கருப்பண்ண சாமிக்கு பலியிட்டுதான் வழிபடுகிறார்கள் என்ற வகையில் திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட்டால் எப்படி தீட்டாகும் என்றும் அபத்தமான சிண்டு முடிக்கும் வாதத்தை முன்வைத்து இந்துக்களின், முருக பக்தர்களின் காலை வாரி விட்டுள்ளது திமுக அரசு.
ஆங்கில ஆட்சி காலத்தில் நடந்த வழக்கிலேயே மலை முழுவதும் கோவிலுக்கே சொந்தம் என்று அறுதியிட்டு தீர்ப்பளித்துள்ள நிலையில், இந்து விரோத திமுக அரசும், திமுக காவல்துறையும் பிற மத விஷமிகளுக்குச் சார்பாக, அவர்களின் பொய் புரட்டுகளுக்கு வலு சேர்க்கும் வகையில் பொய்களை புனைந்து நீதிமன்றத்தில் வாதாடி முருக பக்தர்களுக்கு எதிராகவும் இந்து சமய அறநிலையத்துறையின் வாதங்களுக்கு எதிராகவும் சதிச்செயலில் ஈடுபட்டுள்ளது.
வழக்கில் தமிழக அரசின் நிலைப்பாட்டை எடுத்துரைக்காமல் திமுக கட்சியின் கொள்கைகளை, இந்துக்களுக்கு துரோகம் விளைவிக்கும் இந்து விரோத நிலைப்பாட்டை ஆளும் திமுக அரசு எடுத்துரைத்துள்ளதை இந்துகள் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும். திமுகவிற்கு ஜனநாயக ரீதியில் தக்க பாடம் புகட்ட வேண்டியதும் அவசியமாகும்.
நாடு முழுவதும் புராதன இந்து கோயில்களை ஆக்கிரமித்து மசூதிகள் கட்டப்பட்டுள்ளன. அங்கெல்லாம் கூட இந்துக்களின் வழிபாட்டு நம்பிக்கைகளை கருத்தில் கொண்டு பலி கொடுப்பதை அரசும், மக்களும் தடுத்து வந்திருக்கிறார்கள். ஆனால் திருப்பரங்குன்றம் மலையில் ஆக்கிரமிப்பு செய்து தர்கா அமைத்துகொண்டு அங்கே வம்படியாக ஆடு, கோழி பலியிடுவோம் என்று சில விஷமிகளும் விஷமத்தனமான அமைப்புகளும் வம்பு செய்து வருகிறார்கள். இந்த நிலையில் நியாயமான மற்றும் நேர்மையாக செயல்படவேண்டிய திமுக அரசு நீதிமன்றத்திலேயே பொய் வாதங்களை முன்வைத்து இந்து கோயிலின் புனிதத்தை கெடுக்க முயற்சிப்பது கடும் கண்டனத்துகுறியது.
இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வலுவான வாதங்களை முன்வைக்க வேண்டும். ஏற்கனவே கோவிலுக்கு ஆதரவாக உள்ள நீதிமன்ற தீர்ப்புகளை எடுத்துரைக்க வேண்டும். மலையில் தீபம் ஏற்ற நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை உடனடியாக நடைமுறைபடுத்த வேண்டும்.
ஆனால் ஆளும் திமுக அரசின் கட்டுபாட்டில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையும், துறை அமைச்சரும் உரிய முறையில் செயல்படுவார்களா என்பது சந்தேகத்துக்குரிய நிலையில், இந்திய தொல்லியல் துறை கோவில் தொடர்பான ஆவணங்கள் மற்றும் தீர்ப்புகளை நீதிமன்றத்தில் தெளிவாக விரிவாக முன்வைக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
ஆளும் திமுக அரசு இந்துக்களின், முருகபக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். நீதிமன்றத்தில் பொய்யுரைதாகிலும் இந்துகளை பழிவாங்க துடிப்பது சட்டபடியும், தர்மபடியும் நியாமல்ல என்பதை முதல்வர் உணர வேண்டும்.
வேற்று மத விஷமிகளுக்கு ஆதரவாக பொய் புரட்டுகளை எடுத்துரைப்பதும் அதே சமயத்தில் முருக பக்தர்கள் மாநாடு நடத்தி இந்துக்களின் வாக்குகளை அறுவடை செய்யும் நரி தந்திரம் திமுகவுக்கு கைவந்த கலை என்பதை தமிழக இந்துக்கள் உணர்ந்து திமுகவுக்கு தக்க பாடம் கற்பிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
