கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை தியாகராயர் நகரில் ஓய்வெடுத்து வந்த நாகலாந்து கவர்னர் இல.கணேசன் அவர்கள் வீட்டில் கால் தடுமாறி கீழே விழுந்தததில் தலையில் பலத்த காயமடைந்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இன்று ஆகஸ்ட் 15 மாலை 7 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மறைந்த நாகலாந்து கவர்னர் இல.கணேசன் அவர்கள் 1945 வருடம் தஞ்சாவூரில் பிறந்தவர். சிறுவயது முதலே RSS இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு அவ்வியக்கத்தின் ப்ரச்சாரக்காக ( முழு நேர ) சேர்ந்தார். பிறகு பாஜகவிற்கு அனுப்பப்பட்டு தேசிய பாஜகவின் செயலாளர், துணைத்தலைவர் , தமிழக பாஜகவின் தலைவராகவும் தீவிரமாக செயல்பட்டார். அதன்பிறகு மணிப்பூர் , மேற்குவங்கம் கவர்னராக செயல்பட்ட அவர் தற்போது நாகலாந்து கவர்னராக பொறுப்பு வகித்து வந்தது குறிப்பிடத்தக்கத்து.
அவரது பூத உடலுக்கு கட்சி பேதமின்றி பல்வேறு தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
